புதுக்கோட்டை: மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு

572பார்த்தது
புதுக்கோட்டை: மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு
புதுக்கோட்டை அண்ணா பேருந்து நிறுத்தம் அருகே நேற்று ராஜா (61) என்பவர் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி