புதுக்கோட்டை மாநகரப் பகுதிகளில் மூடப்பட்ட மதுபான கடைகள் மற்றும் பெட்டிக் கடைகளில் கள்ளச் சந்தையில் மது விற்பனையைத் தடுக்கும் நோக்கில் நகர காவல் ஆய்வாளர் சுகுமாறன் தலைமையிலான போலீஸார் குழுவினர் நேற்று (மே 16) காலை தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையை பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வெகுவாகப் பாராட்டி, மாநகரக் காவல் துறைக்கு நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.