புதுக்கோட்டையில் இன்று அரசு டாஸ்மாக் குடோன் மண்டல அலுவலகம் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் வாயில் கூட்டம் நடத்தினர். பணி நிரந்தரம், அரசு ஊழியராக நியமனம், காலி பாட்டில் எடுப்பதில் சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.