புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கேடயப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி சுகுணா, நேற்று (மே 17) மின்னல் தாக்கி உயிரிழந்தார். அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்து அறிந்ததும், சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மாணவியின் உடலைப் பார்வையிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்போரை நெகிழச் செய்தது.