புதுக்கோட்டை அதிமுக மாவட்ட செயலாளராக பழனிவேல் நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிமுக அலுவலகத்திற்கு வந்த அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களும் பிரச்சனையில் ஈடுபட்டதால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற காரணத்தால் யாரும் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.