புதுக்கோட்டை தெற்கு சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜய் (28). அதே பகுதியை சேர்ந்தவர் வீரையா. மீன் வெட்டும் தொழிலாளி. நேற்றிரவு (ஜூன் 6) இருவரும் மது போதையில் இருந்த நிலையில், தகராறு ஏற்பட்டதில் விஜய்யை அரிவாளால் வீரையா சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த விஜய் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.