புதுக்கோட்டை மாவட்டம் பொன்னன் விடுதியைச் சேர்ந்த காவலர் மதியழகன், பிப்ரவரி 15 அன்று பைக்கில் வரும்போது சாலையில் கிடந்த பையைக் கண்டெடுத்தார். அப்பையில் சுமார் 20,500 ரூபாய் இருந்தது. விசாரணையில், இது ஆலங்குடியைச் சேர்ந்த மதி என்பவர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக வசூல் செய்த பணம் என தெரியவந்தது. காவலர் மதியழகன் அந்தப் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்ததால் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மலையூர் காவல் நிலையத்தில் இந்த ஒப்படைப்பு நிகழ்ந்தது.