கூடுதல் வகுப்பறை கட்ட ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு

184பார்த்தது
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால் மாணவர் சேர்க்கையில் தொய்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜ் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த நடவடிக்கை மாணவர் சேர்க்கை பிரச்சனையை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி