புதுக்கோட்டையில் 2ஆவது நாளாக இன்றும் செஸ் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு சதுரங்க கழகம் சார்பாக நடத்தப்படும் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் சதுரங்க போட்டியில் பங்கேற்க தகுதியானவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.