புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் நல சங்கம் சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி 70 வயது நிறைந்த ஓய்வு பெற்றவர்களுக்கு பத்து சதவீதம் ஓய்வு விதத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏராளமான ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.