புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மேற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் ஆதனக்கோட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று பிரதமரின் சுதேசி உறுதிமொழி படிவங்களை வெற்றிலை பாக்குடன் வழங்கினர். இந்திய தயாரிப்புப் பொருட்களையே வாங்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய இந்நிகழ்வில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ரங்கசாமி உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.