புதுக்கோட்டை மாநகராட்சி அசோக் நகர் பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சதன் பிரபாகர் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாவட்ட கழக செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.