புதுக்கோட்டை, கீரனூர் மற்றும் ஏம்பலில் உள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 750 உதவித்தொகை வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என கலெக்டர் மு. அருணா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 94438 52306, 94431 84841 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.