தமிழ்நாடு அரசு கலை பயன்பாட்டு துறை சார்பில் சென்னையில் பொங்கல் விழாவின்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைஞர்கள், அயல் மாநில நாட்டுப்புற கலைஞர்கள், செவ்வியல் கலைஞர்கள் இடம்பெறும் வகையில் நம்ம ஊரு திருவிழா சென்னையில் 18 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 22, 23ஆம் தேதிகளில் நடக்கும் நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக்குழுக்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.