
அரிமளம்: சமத்துவபுரத்தை திறந்து வைத்த கலெக்டர்!
அரிமளம் அருகே கடையக்குடியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ. 826.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 100 பெரியார் சமத்துவபுரம் வீடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அருணா குத்து விளக்கு ஏற்றி, கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.




























