புதுக்கோட்டை: 150 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு

616பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, சுமார் 150 கிலோ புகையிலை பொருட்கள் நேற்று தேனூர் தேனி கண்மாய் அருகே பொன்னமராவதி தாசில்தார் சாந்தா முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி