புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஊனையூர் பிஹெச்எல் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற ரங்கசாமி (24) மீது தங்கராசு (35) ஓட்டி வந்த பைக் மோதியதில் ரங்கசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரங்கசாமியின் தாய் அளித்த புகாரின் பேரில் திருமயம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.