அறந்தாங்கி பள்ளி வாகனங்கள் மோதி விபத்து!

335பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தங்குடியில் இரண்டு தனியார் பள்ளி வேன்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஐந்து மாணவர்கள் காயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.