புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் காவல்துறையினர் நேற்று (பிப். 19) காமாட்சிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (58) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்றது தெரியவந்தது. காவல்துறையினர் அவரிடம் இருந்து போதைப்பொருட்களை பறிமுதல் செய்து, தீவிர விசாரணைக்குப் பிறகு கைது செய்தனர். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.