பொன்னமராவதி: செல்போன் திருடர்கள் கைது

62பார்த்தது
பொன்னமராவதி: செல்போன் திருடர்கள் கைது
பொன்னமராவதி: திருச்சி மாவட்டம் வளநாடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (38). இவர் பொன்னமராவதி அருகே உள்ள எம். உசிலம்பட்டியில் தனியார் பள்ளியில் தங்கி கட்டட வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது செல்போன் மற்றும் 4 ஆயிரத்து 600 ரூபாய் திருட்டுப்போனது. இதையடுத்து கருப்பையா நண்பர்கள் உதவியுடன் தேடியபோது சடையம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே 3 பேர் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்ததை பார்த்து துரத்தினார். ஒருவர் தப்பிவிட 2 பேரை பிடித்து காரையூர் போலீசில் ஒப்படைத்தனர்.  விசாரணையில் அவர்கள், இலுப்பூர் தாலுகா சீகம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜீவா(24), ஒளியமங்களம் கிராமத்தை சேர்ந்த நந்தகுமார்(21) என்பதும், செல்போன், பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய ஒளியமங்களம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் 27 என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி