புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெயிலின் தாக்கம் நேற்று இரவு பெய்த இதமான மழையால் குறைந்தது. இன்று (6. 5. 2026) திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு அப்பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.