திருமயம் சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் பிகே. வைரமுத்து, பொன்னமராவதி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சித்தூர், கூடலூர் பகுதிகளில் இன்று (8. 4. 2026) பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக வேட்பாளர் வைரமுத்திற்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.