பொன்னமராவதியில் உள்ள நூலகத்தில் நூலக வார விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் மற்றும் தமிழ் செம்மல் விருத்தாளர் நெஇரா. சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு, நூலகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதனால் மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து சிறப்புரையாற்றினர். தொடர்ந்து, மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த விழாவில் ஏராளமான அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.