புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவைச் சேர்ந்த சின்னச்சாமி(39) என்பவர், 2023 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், திருமயம் மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் சின்னச்சாமியை கைது செய்தனர். வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகளிர் நீதிமன்ற நீதிபதி கனகராஜ், சின்னச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 21 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.