புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கடியாபட்டி கிளை சாலையில் மணிகண்டன் (27) என்பவர் டாரஸ் லாரியில் மணல் கடத்தியபோது, திருமயம் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 4 யூனிட் மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.