புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தொட்டியம்பட்டியைச் சேர்ந்த கோபிநாத் (27) நேற்று உயிரிழந்தார். இறுதிச் சடங்கின்போது அவரது உடலுக்கு தீமூட்ட முயன்றபோது, அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்து கொண்டிருந்த உடலை பாதியில் அணைத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கோபிநாத்தின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.