பொன்னமராவதி: இரவுநேர பஸ் இயக்கப்படுமா என எதிர்பார்ப்பு

79பார்த்தது
பொன்னமராவதி: இரவுநேர பஸ் இயக்கப்படுமா என எதிர்பார்ப்பு
பொன்னமராவதி ஒன்றியத்தில் 42 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மருத்துவ சிகிச்சை மற்றும் பல்வேறு பணிகளுக்காக பொன்னமராவதி வந்து செல்கின்றனர். ஆனால், பொன்னமராவதியில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் வெளியூர்களுக்குச் செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள், அலுவலர்கள், நோயாளிகள் என்று அனைத்து தரப்பினரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வெளியூரில் இருந்து வருவோர் பஸ்ஸ்டாண்டில் விடியும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, முக்கிய வழித்தடங்களில் இரவு நேரத்தில் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி