அரிமளத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

299பார்த்தது
அரிமளம் யூனியன் அருகே, கிராம மக்களின் 100 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் கடையக்குடி திலகர் தலைமையில், பாஜக, ஐஜேகே, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஏராளமான அதிமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.