புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொன்னமராவதி - புழுதிபட்டி சாலையில்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.