பொன்னமராவதி அடுத்த கொப்பனாப்பட்டி ஊராட்சியில் விவசாய நிலத்தில் ஏர்டெல் மொபைல் டவர் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, ஊராட்சி மக்களின் சார்பில் இன்று கொப்பனாப்பட்டி ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு வைரவளவன் தலைமை வகித்தார். குமணன் சிவசங்கர், குமார், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். விவசாய நிலங்களில் இதுபோன்ற டவர்கள் அமைப்பது விவசாயத்தையும், பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.