புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே இளைய வயல் பகுதியில் ரயில்வே கேட் கீப்பராக பணிபுரியும் பீகாரைச் சேர்ந்த நரேஷ் சவுத்ரி (32) நேற்று (நவ. 13) ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடியபோது, காரில் வந்த சிலர் கேட்டை திறக்குமாறு கூறி அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.