புதுக்கோட்டை மாவட்டத்தில், குழந்தைகள் பிறப்பு பதிவு சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சியாகும். குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவசமாக பிறப்புச் சான்றிதழ் பெறலாம். அதிகபட்சமாக 12 மாதங்களுக்குள் பெறலாம், இல்லையெனில் ரூ. 200 தாமத கட்டணத்துடன் பெறலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெற்றோர்களுக்கு முக்கிய தகவலாக அமைந்துள்ளது.