புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பி. அழகாபுரி வேந்திரன் குளத்தில் நேற்று, அடையாளம் தெரியாத 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பில்லமங்கலம் சரக விஏஓ அளித்த புகாரின் பேரில், திருமயம் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.