புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ராங்கியம் கிராமத்தில் உள்ள மரக்கால் உடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அழகிய நாச்சியம்மன் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பல்வேறு மதலை சிலைகள் மந்தைக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து மரக்கால் உடைய அய்யனார் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.