புதுக்கோட்டை மாவட்டம் ராயவரம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. தேர் கடைவீதி, தெப்பக்குளம் வழியாக சுற்றிவந்து மாலை 6.30 மணிக்கு நிலைக்கு வந்தது. தேர் தெப்பக் குளத்தின் வடகரையில் வந்த போது பக்தர்கள் தங்கள் குழந்தைகளை தேர் காலில் படுக்க வைத்து அம்மனை வழிபட்டனர்.