புதுகை: தண்ணீரின் அவசியம் - ரோட்டரி சங்கத்தின் விழிப்புணர்வுப் பேரணி

264பார்த்தது
புதுகை: தண்ணீரின் அவசியம் - ரோட்டரி சங்கத்தின் விழிப்புணர்வுப் பேரணி
புதுக்கோட்டையில், புதுகை மகாராணி ரோட்டரி சங்கம் சார்பில் தண்ணீரின் அவசியம் குறித்த 'ஆழித்துளி' விழிப்புணர்வுப் பேரணி நேற்று நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்றது. ரோட்டரி ஆளுநர்(தேர்வு) லியோ பிலிப்ஸ் பேரணியைத் தொடங்கி வைத்தார். இதில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனர். தண்ணீரின் அவசியம் குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி