பொன்னமராவதி அருகே அரசமலையில் புளிய மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் இருந்த கிருஷ்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் சென்ற மலைச்சாமி என்பவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கரையூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.