திருமயம் அருகே வெள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (40). விவசாயி. இவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று குளியலறையை சுத்தப்படுத்த வைத்திருந்த ஆசிட்டை எடுத்து குடித்தார். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சீனிவாசன் அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.