ஆசிட் ஏற்றி சென்ற லாரியில் ஏற்பட்ட கசிவு!

2பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில், தூத்துக்குடியில் இருந்து ராணிப்பேட்டைக்கு ஹைட்ரோகுளோரிக் ஆசிட் ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென கசிவு ஏற்பட்டது. இது பெரும் விபத்தை ஏற்படுத்தும் அபாயம் இருந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து வந்து, சுண்ணாம்பு கலந்த நீரை பீய்ச்சி அடித்து, 75 சதவீதம் ஹைட்ரோகுளோரிக் ஆசிட்டின் வீரியத்தைக் குறைத்தனர். பின்னர், லாரியை பாதுகாப்பாக திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி