புதுக்கோட்டை பெருமாநாடு பகுதியைச் சேர்ந்தவர் அன்புசெல்வன் (17). இவர் கூலி வேலைக்குச் சென்றபோது ஏற்பட்ட சம்பளப் பிரச்சனை தொடர்பாக தாய் மாமன் முருகானந்தத்துடன் சேர்ந்து சத்யராஜ் என்பவரைத் தாக்கினார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த நிலையில், நேற்று ஓசூரிலிருந்து பெருமாநாட்டிற்கு வந்த அவரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. காவல்துறையினர் சிறுவனின் உடலைக் கைப்பற்றி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.