இலுப்பூர் பிடாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், இலுப்பூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்தோணி கோவில் தெருவைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.