புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் கடைவீதியில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்றல், மது அருந்துதல், மது அருந்தி வாகன ஓட்டுதல் மற்றும் போதைப்பொருட்களைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்துப் பாட்டுப்பாடியும் நடனமாடியும் விளக்கிக் கூறினர்.