புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வருவாய் கிராமத்தில் 11.02.2026 அன்று நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, வரும் 18.02.2026 புதன்கிழமை அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.