புதுச்சேரியில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்றைய
அரசியல் சூழலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என்று கூறினார்.
திமுக கூட்டணி வலுவாக இருந்தாலும், நேற்றைய போராட்டத்தில்
காங்கிரஸ் பங்கேற்கவில்லை என்றும்,
திமுக பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என்றும், மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.