புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே தென்னலூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க வாடிவாசலைக் கொண்ட இந்த போட்டியில் திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1200 காளைகளும் 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சிங் மற்றும் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே. செல்லபாண்டியன் ஆகியோர் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.