புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல் துறையினர் நேற்று (ஏப். 7) குடுமியான்மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாடக மேடை அருகே மண்ணவேலம்பட்டியைச் சேர்ந்த மணிவேல் (43) என்பவர், பொது இடத்தில் மது அருந்திவிட்டு, அவ்வழியே செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பொது இடங்களில் மது அருந்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.