இலுப்பூர் மேலப்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், இலுப்பூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலப்பட்டி அரசு மதுபானகடை அருகே, அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்த மாத்திராம்பட்டியை சேர்ந்த செல்வம் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.