கடந்த 10 ஆம் தேதி இரவு டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் குண்டு வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, விராலிமலை பகுதிகளில் உள்ள விடுதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை போலீசார் இரவு முழுவதும் தீவிரமாக சோதனை செய்தனர்.