புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள வடுகபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாளை (நவம்பர் 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதனால் வடுகப்பட்டி, வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி, முள்ளையூர், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநள்ளூர், சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி, சித்தாம்பூர் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும். இது குறித்து விராலிமலை உதவி செயற் பொறியாளர் ஜெ. ஜேம்ஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.