புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோயிலில், கோயில் நிலங்களை மீட்கக் கோரி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய ஆறுமுகம் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில், அவரது இல்லத்திற்கு இன்று பாஜக மேற்கு முன்னாள் மாவட்ட தலைவர் விஜயகுமார் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, பாஜக சார்பில் ரூ. 10,000 நிதி உதவி வழங்கினார்.